ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
வினாவுத்தரம்: (பகுதி 3)
பாம்பன் சுவாமிகள் வினாவுத்தரமாக பாடிய திருவலங்கற்றிரட்டு இரண்டாம் கண்டத்தில் உள்ள முதல் பாடலைச் சென்ற பதிவில் பார்த்தோம்.
இப்பொழுது, இரண்டாம் வினாவுத்தர பாடலினைக் காணலாம்.
எழுத்தரி லொழித்திட வேவுரையென்
கழுத்தினில் வளைத்திடு கலனெவனார்
கொழுத்தவர் திருத்தலை குவிப்பதெவன்
செழிப்புயர் குகற்குள திருத்தணிகை
பாடலில் உள்ள கேள்விகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்:
எழுத்து அரில் ஒழித்திட ஏவு உரை என்? - அரில் என்றால் குற்றம் என்று பொருள். எழுத்து குற்றம் என்றால் எழுத்துப் பிழையைக் குறிப்பது ஆகும். எழுத்துப் பிழையை நீக்குவதற்கு கட்டளையிடும் சொல் என்ன? திருத்து என்று தான் கூறுவோம். ஆகவே, இதன் விடை திருத்து என்பது ஆகும்.
கழுத்தினில் வளைத்திடு கலன் எவன்? - கலன் என்பது பூண் எனப்படும். அதாவது அணிதல். கழுத்தை சுற்றி அணிதல் என்பது மாலை ஆகும். அணி என்ற சொல்லுக்கு மாலை என்றும் ஒரு பொருள் உண்டு. ஆகவே, இதன் விடை அணி என்பது ஆகும்.
ஆர் கொழுத்தவர் திருத்தலை குவிப்பது எவன்? - ஆர் = அன்பு; கொழுத்தவர் = செழிப்புற்றவர்; அதாவது மிகுதியாக உடையவர். அன்பு மிகுதியாக உடைய அடியார்கள் தலைக்கு மேல் குவிப்பது எது? கை என்பது விடையாகும்.
இந்த விடைகளைக் கூட்டினால் திருத்து + அணி + கை = திருத்தணிகை.
எல்லா வளங்களும் உடைய குகப் பெருமானுக்கு உள்ள திருத்தணிகை என்ற விடையை ஈற்றடியில் சுவாமிகள் கூறுகின்றார்.
திருச்சிற்றம்பலம்

NICE DEVOTION TOWARDS GURU
ReplyDeleteIF POSSIBLE .,.,.,
ReplyDeletePLEASE .,., JUST INCREASE THE FONT SIZE FOR DOWMLOAD CONTENT ,..,.,
AND MAKE IT APPEAR ON MIDDLE OF THE PAGE ,..,,. AS SIMILAR AS VINAVUTHARAM
Thanks for your valuable feedback Sir... I have done the changes... I hope it looks good now.
ReplyDeleteVAAZHGA GURU UDAN
ReplyDeleteVAZHARGA GURU UDAN
om saravana bhava
ReplyDelete