Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Wednesday, 6 May 2020

கலியுக மற்றும் சாலிவாகன ஆண்டு கணக்கீடு:

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

கலியுக மற்றும் சாலிவாகன ஆண்டு கணக்கீடு:

பாம்பன் சுவாமிகள் தாம் அருளிய பதிகங்களில்/நூல்களில், அந்நூல் இயற்றப்பட்ட ஆண்டு மற்றும் தேதியினை சரியாக மிகத்துல்லியமாக குறிப்பிட்டு உள்ளார், அவ்வாறு ஆண்டினை குறிப்பிடும் போது சுவாமிகள் கலியுக ஆண்டு முறையையும், சாலிவாகன ஆண்டு முறையையும் குறிப்பிட்டு உள்ளார், அவற்றினை எந்த ஆங்கில ஆண்டு என்பதைக் கண்டுபிடிக்கும் முறையை இங்கு காணலாம்.

கலியுக ஆண்டு கணக்கீடு:

சுவாமிகள் திருத்தொடையல் பதிகம் இயற்றிய ஆண்டினைக் குறிப்பிடும் போது, கலியுகம் "நாலாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு" (4994) என்று குறிப்பிட்டு உள்ளார். இது எந்த ஆங்கில ஆண்டு என்பதை கண்டுபிடிக்க நாம்  கலியுக ஆண்டின் எண்ணிலிருந்து 3102 என்ற எண்ணைக் கழிக்க வேண்டும். அதாவது 4994 – 3102 = 1892. திருத்தொடையல் இயற்றப்பட்ட ஆண்டு கி.பி. 1892 என்பதை அறியலாம்.

சாலிவாகன (சக) ஆண்டு கணக்கீடு:

அசோக சால வாசத்தில், சுவாமிகள் கால் முரிவு ஏற்பட்ட ஆண்டினைக் குறிக்கும் போது, சாலிவாகன ஆண்டு (சக ஆண்டு) "ஒர் ஆயிரத்து எண்ணூற்று நாற்பத்து ஆறு". அதாவது 1846ம் ஆண்டு என்று கூறிப்பிட்டு உள்ளார்.  இது எந்த ஆங்கில ஆண்டு என்பதைக் கண்டுபிடிக்க நாம்  சாலிவாகன ஆண்டின் எண்ணிலிருந்து 77 என்ற எண்ணைக் கூட்ட வேண்டும். அதாவது 1846 + 77 = 1923. சுவாமிகளுக்கு கால் முரிவு ஏற்பட்ட ஆண்டு கி.பி. 1923 என்பதை அறியலாம்.

குறிப்பு: திருவள்ளுவர் ஆண்டினை கணக்கிட, நாம் அந்த ஆண்டின் எண்ணிலிருந்து 31 என்ற எண்ணைக் கழிக்க வேண்டும். இந்த வருடம் திருவள்ளுவர் ஆண்டு 2051. (2051 – 31 = 2020).

திருச்சிற்றம்பலம்.