ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
வினாவுத்தரம்: (பகுதி 1)
பாம்பன் சுவாமிகள் வினாவுத்தரமாக சில பாடல்கள் பாடியுள்ளார். வினா உத்தரம் என்பதன் பொருள் 'வினா விடை'. ஒரு பாடலிலேயே விடுகதைப் போல் சில கேள்விகளைக் கேட்டு அதன் பதிலையும் அப்பாடலிலே அமைக்கும் முறை ஆகும்.
சுவாமிகளின் பண்ணிசை நூலான திருவலங்கற்றிரட்டு என்ற நூலின் தொடக்கத்தில் அந்த நூலின் பெயரையே விடையாக வருமாறு வினாவுத்தர பாடல் ஒன்று பாடியுள்ளார்.
பின்னையின் பேர் ஆவது எது பீட்டின் சொல் என் பழகி
என்னும் மொழி என்? கவரி ஏந்திமிக்கார் முன் அசைத்தே
உய்பவனை ஏவுஉரை யாது? ஓம் சேய் பண் நூல் என்உரை
செய் திருவலங்கற் றிரட்டு
இப்பொழுது பாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடைகளை கூட்டுவோம்.
பின்னையின் பேர் ஆவது எது: பின்னைஎன்பது திருமகளைக் குறிக்கும் சொல். சுருக்கமாக திரு. பின் ஐ என்று பிரித்துக் கொண்டால் 'பின்பு வந்த கடவுள் (ஐ)' என்று பொருள் அதாவது விநாயகருக்கு பின்பு வந்த முருகன் என்றும் கொள்ளலாம். பொதுவாக இறைவனை திரு என்று குறிப்பர்.
பீட்டின் சொல் என்?: பீடு என்ற சொல்லிற்கு பொருள் என்ன? பெருமை, வலிமை என்று பொருள். வலிமை வலம் எல்லாம் ஒரே பொருள் தரும் சொற்கள். இதற்கு விடை வலம் ஆகும்.
பழகி எனும் மொழி என்?: பழகி என்றால் பழகுதல் என்பதலிருந்து வந்தது. பழகுதல் என்றால் கற்றல். பழகி என்றால் கற்று எனப்படும்.
கவரி ஏந்தி மிக்கார் முன் அசைத்தே உய்பவனை ஏவு உரை யாது?: விசிறி (சாமரம்) ஏந்தி பெரியவர்கள் முன் அசைத்து வாழ்பவனை ஏவுகின்ற உரை யாது? அதாவது சாமரத்தை கையில் வைத்திருப்பவனை பார்த்து நாம் சொல்லும் சொல் வீசு என்பது ஆகும். வீசு என்பதைத் தூய தமிழில் இரட்டு என்று கூறுவர். ஆகவே, இதன் விடை இரட்டு ஆகும்.
இந்த நான்கு கேள்விகளின் விடையை கூட்டினால்
திரு+வலம்+கற்று+இரட்டு=திருவலங்கற்றிரட்டு
என்று வரும்.
பிரவண வடிவான சேய் கடவுள் மீது பாடப்பட்ட பண்ணிசை நூலான திருவலங்கற்றிரட்டு என்ற பதிலைக் இறுதியில் கூறுகின்றார்.
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment