ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
நனி கூவியும் வரக் கண்டிலேன்:
பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானை நன்றாகக் கூவி அழைத்தார். ஆனால், கருணையே வடிவான முருகன் ஏதோ காரணத்தால் அங்கு வரவில்லை. சுவாமிகள் சற்றே சிந்தித்தார். முருகன் இந்நேரம் இங்கு வாராது இருக்க காரணம் இதுவோ இதுவோ என்று எண்ணி எண்ணி ஸ்ரீமத் குமாரசுவாமியத்தில் வேட்கை காண்டத்து பகுதியில் 'வேற் கடவுள் வேட்கை' என்னும் தலைப்பில் பத்து பாடல்களை நயம்பட பாடியுள்ளார். இப்பாடல்களில் பத்து காரணங்களையும் பட்டியல் இட்டு உள்ளார். அவற்றுள் இக் கால சூழலுக்கு ஏற்றவாறு உள்ள 8 ஆம் பாடல் அடியார்களின் உள்ளத்தை உருக்கும்.
சீர்த்த தம் அடியார்கட்கு இங்கு முற் தீவினை பயனாகவே
ஆர்த்த நோய்கள் அழிக்கத் தந்திர மந்திர செய நீர்களை
வார்த்து நன்கு செய் மாமருந்திடு வேலை மேற்கொண்டு உளார் கொல்லோ
கூர்த்த வேல் பிடித்தாரை நான் நனி கூவியும் வரக் கண்டிலேன்
பெருமை உடைய என் அடியார்கள், முன் வினையின் காரணமாக நோய் உற்றார்கள். அந்நோய்களை அழிக்கவும், தம் அடியார்களை காக்கவும் மந்திர தந்திரம் (ஔடத சித்திகள்) செய்து நீர்களை வார்த்து மாமருந்து ஒன்று செய்து தன் அடியார்களுக்கு தரும் வேலையை அந்த வேலவன் மேற்கொண்டு உள்ளானோ? நான் நன்றாக கூவியும் இங்கு வரவில்லையே என்று பாடிய நயம் என் என்று சொல்ல!!!!
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment