தகரவெளி இறைவனை உணர்ந்து தகர வித்தையைக் கைவரப் பெற்ற மகான்கள், அனைத்து உயிர்களிலும் இருப்பார்கள்; அனைத்து உயிர்களும் அவருள் கலந்து இருக்கும். இதனைத் தெளிவாக உணர்த்தும் விதமாகப் புராணத்தில் ஒரு காட்சி காணப்படுகின்றது.
வியாசரின் புத்திரர் சுகபிரம்மர். தகர வித்தையை நன்கு கற்றறிந்தவர் இவர் பிறந்ததில் இருந்து தந்தையை விட்டுப் பிரிந்ததில்லை. ஒருநாள், திடீரென காட்டுக்குள் ஓட ஆரம்பித்தார். பின்னால் ஓடிய வியாசர் "மகனே! மகனே' எனக் கூவி அழைத்தார். உடனே அங்கிருந்த மரங்களெல்லாம் "என்ன என்ன' என்று கேட்டதாம். அதாவது சுகபிரம்மர் வேறு, தாங்கள் வேறு அல்ல என்று காட்டிக் கொண்டன. மரங்கள் மட்டுமல்ல, அங்கிருந்த பறவைகள், விலங்குகள், மலைகள், நதிகளும் "என்ன என்ன' என்றனவாம். சுகப்பிரம்மரும் தாங்களும் ஒன்றே என்ற மனநிலையை அவை கொண் டிருந்தன. அதனால், அவரது பிரதிநிதியாக அவை பதிலளித்தன. இந்த உலகிலுள்ள "எல்லாமே அவர்' என்ற வகையில் அவர் மேம்பட்ட நிலையில் இருந்தார். "சர்வபூத ஹ்ருதயர்' என்று அவரை அழைத்தனர். இதுவே தகராலய இரகசிய நிலையும் ஆகும். இதுவே அமல முத்தி நிலை என்று சுவாமிகள் கூறிப்பிடுகின்றார்.
இந்த அற்புத காட்சியைச் சுவாமிகள் முதல் மண்டலத்தைச் சார்ந்த சிவலோக சுந்தர மாலை என்ற பதிகத்தின் 27ஆம் பாடலில் மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.
றந்தமொடு செடிமரங்க ளதிர்தனவா லமலமுத்தி
பெந்தமிலா நிறைவதனைப் பெற்றவரு மெண்ணிலரே
சிந்தைமகிழ்ந் தருள்வதெந்நாள் சிவலோக சுந்தரனே
இதன் பொருள்:
தந்தை சுதனே என்ற தருணம்: தந்தையாகிய வியாசர் தன் மகன் சுகமுனிவரை மகனே என்று அழைத்த தருணம்
அவண் ஏன் ஏன் என்று அந்தமொடு செடி மரங்கள் அதிர்தனவால் அமல முத்தி: அங்கு (அவண்=அவ்விடம்) இருந்த செடி மரங்கள் முதலான அனைத்தும் என்ன என்ன என்று பதில் சொல்லியன. இதுவே தகராலய நிலை; மலங்கள் இல்லாத முத்தி நிலையுமாம்
பெந்தமிலா நிறைவதனைப் பெற்றவரும் எண்ணிலரே: எந்த வித பந்தமும் பற்றுமற்ற (பெந்தம் - பந்தம்/கட்டு) பூரண நிலையும் இதுவே; இந்த நிலையைப் பெற்ற அருளாளர்களும் எண்ணில் அடங்கார்.
சிந்தை மகிழ்ந்து அருள்வது எந்நாள் சிவலோக சுந்தரனே - இந்த தகராலய நிலையை திருவுளம் மகிழ்ந்து அடியேனுக்கு அருளும் நாள் எந்த நாள்? சிவலோக சுந்தரனே!!!
இது போன்ற புராணக் காட்சிகளைப் பாம்பன் சுவாமிகள் தம்முடைய பாடல்களில் பதிந்து, நம்மனோர் முத்தி நிலையை எளிதில் புரிந்து கொள்ளவும்; அந்நிலையை நாமும் இறைவனிடம் கேட்கும் பொருட்டு அமைத்துள்ள கருணையைப் பல இடங்களிலும் காணலாம்.
குருவருள் வாழ்க!!!
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment