ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
அருணகிரிநாதர் புகழாரங்கள்:
பாம்பன் சுவாமிகள் பதிகங்கள் தோறும் அருணகிரிநாதரைப் பாடியே பதிகங்களை நிறைவு செய்யும் நியமம் பூண்டு ஒழுகினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பதிவில் பாம்பன் சுவாமிகள் அருளிய முதல் மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு பதிகங்களிலும் சுவாமிகள் அருணகிரிநாதரை எப்படி எல்லாம் புகழ்ந்து உள்ளார் என்பதைப் பதிக வரிசையில் காணலாம்.
- 1. அமரர்கோ -- அருணகிரிநாதன்
- 2. திருப்பரங்கிரி -- தெள்ளறிஞன் அருணகிரி
- 3. திருச்செந்தில் -- அருள் அருணகிரி
- 4. திருப்பழநி -- உரன் அருணகிரி
- 5. திருவேரகம் -- அருணகிரிமுனி
- 6. திருக்குன்றுதோறாடல் -- திருஅருணகிரி
- 7. திருச்சோலைமலை -- சந்தமுனி எந்தை
- 8. திருவிராமேச்சுரம்-- தகை கொண்ட அருணகிரியார், நிஜ அருணை முனிவன்
- 9. திருப்புலியூர் -- அருணகிரி
- 10.திருவருணை -- மதர் அருணகிரி
- 11.திருக்குமரக்கோட்டம் -- ஓகை கூர் அருணகிரி
- 12.திருத்தணிகை - அருணகிரி
- 13. திருமலை -- அருணகிரி
- 14. திருக்கயிலாசமலை -- தெருள் அருணகிரிநாதன்
- 15. சண்முகானந்தசிவம் -- சோண சயில நாமத்தன்
- 16. நிட்களானந்தகுகன் -- நிறை கருணை அருணகிரி
- 17. சரவணபவானந்தன் -- அருணகிரி எந்தை
- 18. ஆனந்தமுகில் -- புகழ் படித்த கோன்
- 19. குகப்பிரமம் -- அருணகிரி
- 20. பூரணானந்த குகன் -- கருணை பெருகு அருணகிரி
- 21. குந்துகால் -- தப்பாது துன்பற்று இமிழ் பாவினம் சொற்ற தக்கோன்
- 22. கதிரேசன் -- கஞ்ச வீ அடியின் அருளில் நின்று புகழ் கழறினோர்
- 23. சரவணபவன் -- அருணகிரி
- 24. நவரத்தின மீக்கூற்று -- சிறுமை இ(ல்)லா இன்ப அருணகிரி
- 25. உட்பகை ஒழிக்க மனு --
- 26. பெரும்பேறு --
- 27. உள்ளூர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் -- திரு உளத்திற்கு இனிய அருணகிரி, எரி நிரய யாதனையை நூறு அருணகிரி
- 28. வேண்டுகோள் -- அருணகிரி
- 29. பொன்னவிர் மேனி -- செய்ய தீ வரைப் பேர் எந்தை
- 30. கருணாகரவேலன் -- திருப்புகழ் செப்பிய என்னை ஆள் உடையான்
- 31. சிகிவாகனன் -- வன்னி சிலைப் பெயரோன்
- 32. அயிலரசு - அருளால் தண் அம் தமிழ் அனுபூதி அறைந்தோன்
- 33. கந்தர் இரட்டை மணிமாலை -- கந்தர் அனுபூதி அத்தன்
- 34. கந்தர் ஒருபா ஒருபஃது -- சண்முக நிச்சயம் ஓர்ந்து திருப்புகழ் சாற்றினவன்
- 35. மனது -- தெருள் ஆர் அருணகிரி
- 36. எழிலார் சுரும்பு -- அருணகிரியார்
- 37. திருநிறைந்த சிவம் -- அருணைப் பெயரான்
- 38. இந்துமிலைந்தோன் -- பாட்டில் புகழ் அருணைப் பெயரோர்
- 39. கந்தர் திருவாரம் -- ஏர் கிளர் ஒள் அருணைப் பேரன்
- 40. அவனியாசை -- அணாமலை பேருடையான்
- 41. பகலெல்லாம் -- கந்தர் அலங்காரம் சொன்னோன்
- 42. கங்கையின் சேய் -- வேத வழி நின்றுள சந்த மாமுனி
- 43. மண்ணிற் சிறுவீடு -- அருணைப் புதன்
- 44. புவியாரே -- எஞ்சா அருணைப் பதி இருந்த எந்தை அருணகிரி
- 45. சொன்னயம் -- அப்பன் நல் அருணகிரி
- 46. கந்தர் நான்மணி மாலை -- இன்புகழ் முனி
- 47. நெஞ்சுப்பத்து -- அம் சொல் நயம் விஞ்சிய அருள் புகழ்கள் அந்நாள் நெஞ்சுருக ஓதினவன்
- 48. உலகவாழ்வு -- அருணை நாதன்
- 49. ஞாயவாதிகள் விளக்குவர் -- இன்பு அடைந்த அருணகிரி
- 50. போற்றி விண்ணப்பம் -- தீ அரிப் பெயரோர்
- 51. சரண விண்ணப்பம் -- எம்மான் அற்புத அருணைப் பேரான்
- 52. அமிர்தமதி -- அருள் கடல் அருணையான்
- 53. சிறுமை நீக்குயர் செல்வம் -- ஓது செந்தமிழால் நிரம்பு அனுபூதி சொன்னவன்
- 54. துறுவுநோக்கம் -- வெள் ஏனம் தெரிவரு மலைப் பேர் முநி
- 55. பிழைபொறுக்க முறையீடு -- மாசில் நல் அருணாசலத்தவன்
- 56. உள்ளக்களி -- விந்தை மிக உள அருணகிரி
- 57. திருவுயர்ந்த ஆறெழுத்தான் -- புந்தி நிறைவு உடை அருணகிரி
- 58. அடியவர்க்கடிமை நாம் -- கொடுநிழல் அவிய வந்தகுறை ஓவ இன்பு குறையாத பேறும் உறவே வடுவு அறு கவிகள் சொன்ன அருணகிரி
- 59. ஆரணத்திறுதி -- அருணையன்
- 60. சிவலோக சுந்தரமாலை -- சுமதி உடை அருணகிரி
- 61. பணம் -- புகழ் குயின்றோன்
- 62. அபிமானமறுத்தல் -- அருணகிரி
- 63. மறைமுடிவு -- பூச் சனிப்பு இலா அருணகிரி
- 64. ஏம விலேகர் -- பரஞ்சுடர் ஓதிப் பேர் திருவாளன்
- 65. ஶ்ரீ கதிர்காமவேலர் வண்ணம் - அனுபூதி மாமுனி
- 66. பங்கிகள் -- மதி ஒலியான்
- 67. பரஞ்சுடர்க்கண்ணி -- அருணை நாதர்
- 68. பொன்மயிற்கண்ணி -- இன்ப கடல் படிந்த எந்தை அருணகிரி
- 69. குருபரக்கண்ணி -- அண்ணல் அருணகிரி
- 70. சதாசிவக்கண்ணி -- எம்மான் அருணகிரி
- 71. தேந்தேனேயென் கண்ணி -- அருணகிரி நாதன்
- 72. பரம்பொருட் கண்ணி -- சொல்லேறு அரும் புகழ்கள் சொன்ன பெரியோன்
- 73. பூரணக் கண்ணி -- ஈர் எண் சகச்சிர சந்தப்பா இயம்பிய மெய் ஆரியன்
- 74. திருவுருமலைக் கோமகன் -- சிகிவரை ஒலி முனி
- 75. ஆனந்தக் களிப்பு -- சீர்மலி ஆனந்த வீட்டின்பத்தைச் சேர்ந்த அண்ணாமலைப் பேர் எந்தை
- 76. சமாதான சங்கீதம் -- முத்தி தரும் குகப்பிரமத்தை வாழ்த்திய முத்தன் அண்ணாமலையான்
குறிப்பு: ஒரு சில பதிகங்களில் அருணகிரிநாதர் பற்றிய குறிப்பினை எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை அதனால் அந்த பதிகங்களில் பெயருக்கு நேரே ஏதும் குறிப்பிடாமல் விட்டுவிட்டோம்.
படத்தில் உள்ள அருணகிரி நாதர் படிமம் (சிலை), பாம்பன் சுவாமிகளின் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள திருவேட்டிஸ்வரன் பேட்டையில் உள்ள சிவலாயத்திற்கு சுவாமிகளால் அளிக்கப்பட்டது. இன்றும் இக்கோயிலில் உள்ள முருகப் பெருமான் சன்னிதியில் இப்படிமத்தை நாம் காணலாம். ஆண்டு தோறும் பாம்பன் சுவாமி அடியார்களால் அருணகிரி நாதர் குருபூஜை இக் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த பதிவினை 2020ஆம் ஆண்டு அருணகிரி நாதர் குருபூஜை தினத்தினை (04.07.2020) முன்னிட்டு அருணகிரி நாத ஆனந்த பராபரருக்கு சமர்ப்பிக்கின்றோம். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் சுவாமிகளும் அவர்தம் அடியார்களும் மன்னித்து அருள வேண்டுகின்றோம்.
இந்த குறிப்புகளைத் திரட்டி தொகுத்து அளித்த பாம்பனடியார் திரு. வெங்கடாசலம் அவர்களுக்கு நன்றி!
அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி போற்றி!!!
திருச்சிற்றம்பலம்

அருணகிரிநாதர் குருபூசை விழா - 2019
ReplyDeleteசிறப்புரை: முனைவர். நல்லூர் சரவணன்
https://youtu.be/7GPIMfCcItQ
நன்றி வெற்றி!!!
ReplyDeleteஆன்மிக த்திலா மூடநம்பிக்கை யை அகற்றி பரிசுத்தப்பாபடுத்திய பாமாபன் சுவாமிகள் அருணகிரி முனீந்தரரின் இளமைகால வாழ்க்கை க்கு கற்பித்த அசிங்கத்தையும் துடைத்து தூய்மை யை வெளிப்படுத்தினார் வாழ்க பாமபனார் நெறி.
ReplyDeleteஉண்மை ஐயா...
Delete