Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Saturday, 11 July 2020

அருணகிரிநாதரைப் பற்றிய பாரதியின் வரிகள்

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

சந்தமுனி அருணகிரி நாதர் பற்றி மகாகவி பாரதியாரின் வரிகள்:

"சந்தக் கணக்கை வைத்துக் கொண்டு, தெளிவாகவும் இயற்கையாகவும் சொல்லுதல் மிகவும் அருமை. காலிலும் கையிலும் தளைகளைப் பூட்டிக்கொண்டு கூத்தாட முடியாதென்று பழமொழி சொல்வார்கள். இந்த மகானுடைய (அருணகிரி நாதர்) கவிதையோ என்றால் மிகவும் கடினமான தளைகளைப் பூட்டிக்கொண்டு தெய்வீக கூத்தாடுகிறது"

நூல் குறிப்பு

நூலின் பெயர்: பாரதி புதையல் பெருந்திரட்டு, (அருணகிரியின் கவிதை) 
வெளியீட்டாளர்: திரு. ரா.அ. பத்மநாதன் 
பக்கம்: 280

இதே போன்று பாம்பன் சுவாமிகளும் அவருடைய சந்தகவிகள் எத்தகையது என்பதைத் தம்முடைய திருப்பா நூலில் கீழ்வருமாறு கூறுகின்றார்:

உயிரோடும் உயிர் மெய்யோடும் அணை குறிலுக்கு குறிலும், நெடிலுக்கு நெடிலும், வல்ஒற்றுக்கு வல்ஒற்றும், மெல்ஒற்றுக்கு மெல்ஒற்றும், இடைஒற்றுக்குக் இடைஒற்றும் எதுகை மோனையோடும் கூடிய நால் அடியும் அளவாகப் பொருந்த எழுவாய் பயனிலை ஏய வண்ணக் குழிப்புடைப் பாட்டுப் பாடுதல், கால்களில் தளை பூட்டிக் கொண்டு மேள தாளங்கட்கு இயைய நடிப்பது ஒக்கும் ஆகலின் எளிது அன்று என்பதும் ஈங்குக் கருதிக் கோடற் பாற்றே

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தெய்வீக கவிகளைக் கற்றலும் கேட்டலும் இனிதே!!!

திருச்சிற்றம்பலம்!!

No comments:

Post a Comment