அனவரத பாராயண அஷ்டகம்
உரை: டாக்டர். S.P. சபாரத்தினம், M.A., Ph.D
நன்றெனும் பிரணவ அவன்இளை ஞனும்மறை
தொன்றெனும் பொருளெனச் சுடர்சிவ னும்உமையும்
ஒன்றெனும் பெரியவர் உயர்பதம் பணிவேன் (1)
நன்றெனும் பிரணவ அவன் இளைஞனும் - எப்பொழுதும் மங்கள நாதமாக உள்ள பிரணவத்தின் வடிவாக உள்ள விநாயகப் பெருமானின் இளவலான குகப்பெருமானும்;
அறை -வேதாகமங்களில் புகழ்ந்து கூறப்படுகின்ற;
தொன்றெனும் பொருள் எனச் சுடர் சிவனும் - முன்னைப் பழம் பொருளுக்கும் பழம் பொருளாகத் திகழ்பவனான சிவபெருமானும்; (தொன்றெனும் பொருள் எனச் சுடர்)
உமையும் - அவ்வாறே சிவத்தோடு ஒத்துப் பழம் பொருளாக விளங்கும் உமையும் (ஆகிய இந் நாற்பெரும் தெய்வமும்);
ஒன்றெனும் பெரியவர் - உண்மையில் ஒரே பரம் பொருளே: வேறுபட்ட தெய்வங்கள் அல்ல என உணரும் ஞானப் பெரியோர்களின்;
உயர்பதம் பணிவேன் - உயர்ந்த பெருநிலையில் விளங்கும் திருவடிகளை நான் வணங்குவேன்.
(கணபதி, கந்தன், சிவன், உமை - இந்நால்வரும் ஒருவரே. இந்தக் கருத்தை உறுதியாக நெஞ்சிற்கொண்டுள்ள பெரியோர்களின் திருவடிகளை எப்பொழுதும் வணங்கு கின்றேன் - இக்கருத்தே இனிவரும் ஏழுபாடல்களிலும் வலியுறுத்திக் கூறப்படுகிறது).
துள்உலைவு ஓட்டுதண் சுடர்அணி பரமனும்
வள் உலையாக் கிரிமகளும் ஐங்கரனும் என்
உள் உலையாப் பொருள் ஒன்றெனத் தொழுதேன் (2)
மனம் துள் உலைவு ஓட்டு தண் சுடர் அணி பரமனும் - மனம் துள்ளி அலைபாய்வதையும் வருத்தம் உறுவதையும் தவிர்த்து விடுபவனும், குளிர்ந்த பிறைச் சந்திரனை அணிந்து இருப்பவனுமான சிவபெருமானும்;
வள்உலையாக் கிரிமகளும் - அழகு அல்லது அருள்வளம் என்றும் குறைவு படாமல் உள்ள மலைமகளாம் உமையும்;
ஐங்கரனும் - ஐந்து திருக்கரங்களை உடைய கணபதியும்;
சோதித்தண் முகஉமை தோம்இல் ஐங்கரன் முரண்
காதித்தன் களிதரு கடம்பன் ஒன்றெனும் நிசம்
ஓதித்தண் அளிமிக உறுதுயர் களைவேன் (3)
அஞ்சோதித் தண்முக உமை - அழகிய ஒளிபொருந்திய சந்திரன் போன்ற திருமுகம் உடைய உமையும்;
தோம் இல் ஐங்கரன் - வணங்குவாருடைய குற்றங்களைப் போக்கி விடுகின்ற ஐங்கரனான கணபதியும்;
மதகரிமுகனையும் - மதம்வாய்ந்த யானை முகம் உடைய கணபதியையும்;
அயல் களை அயில் அரசனையும் - அன்னியம் எனப்படும் துவிதநிலையை அழித்து அத்துவிதப் பேற்றை அருளும் வேற்படை அரசனான குகப்பெருமானையும் (அல்லது அயலார் எனப்படும் பகைவரை அழிப்பவனான வேற்படை அரசனையும்);
ஒன்னலர்கள் தம் இயல் களை சிவனையும் - பகைவர்களின் தீமைத் தன்மைகளை நீக்கிவிடுகின்ற சிவபெருமானையும்;
ஒரு பொருள் எனின் - ஒரு பரம் பொருளே எனக் கருதி வழிபட்டால்;
இடர்ப் புயல் களை அருள் உறும் -துன்பமாகிய புயற்காற்றை நீக்கிவிடுவதான அருளானது வந்து சேரும்;
காலொடு நவிரமும் ஆர்இறை களிஉமை
வேலொடு வருகுகு வேள்களப முகன் மெய்
வாலொடு மிளிர்அறிவு இனிதுஎன மகிழ்வேன் (5)
களி உமை - சிவானந்த மயமான உமை அம்பிகை;
வேலொடு வரு குகவேள் - அடியாரைக் காக்க எப்பொழுதும் வேலோடு விரைந்து வரும் குசுப் பெருமான்;
களப் முகன் - யானைமுகனான கணபதி (ஆகிய இந்நால்வரும்);
மெய் வாலொடு மிளிர் அறிவு - எப்பொழுதும் தூய்மையாகவே திகழ்கின்ற ஞானமே வடிவான ஒரேபரம் பொருளே எனக் கருதி;
இனிதென மகிழ்வேன் - இவ்வாறு பேதம் காணாமல் ஒன்றெனக் கண்டு வழிபடுவதே சிறந்தது எனக்கருதி மகிழ்ச்சி அடைவேன்.
குருவருள் புரி சௌம் கிரீம் சிவை குகன் இடர்
ஒருவுஅருள் புரிபத விநாயகன் உயர்சிவன்
அருவருள் புரிபதியாய் எனைக் காக்க (6)
திருவருள் புரியும் ஐம் கிலீம் திரிபுரை - திருவருள் புரிகின்ற ஐம், க்லீம் எனும் பீஜாட்சரங்களுடன் விளங்கும் திரிபுரையும்
பரை - பராசக்தியும்;
குருவருள் புரி சௌம் கிரீம் சிவை - ஞான குருவாக எழுந்தருளி ஞானப் பாற்சோறு அளிப்பவளும் "சௌம்" "ஹ்ரீம்" எனப்படும் பீஜாட்சரங்களுடன் கூடியவளு மான உமையம்பிகை;
குகன் - குகப் பெருமான்;
இடர் ஒருவு அருள்புரி பத விநாயகன் - வணங்கும் அடியார்களுக்கு நேர உள்ள இடையூறுகள் நீங்கும் வண்ணம் அருள்புரிகின்ற திருவடிகளை (அல்லது கருணை நிலையை) உடைய கணபதி;
உயர் சிவன் - ஏனைய தெய்வங்களினும் மேம்பட்டு விளங்கும் சிவபெருமான் (ஆகிய இந்நால்வரும்);
அருஅருள் புரிபதி - தடத்த நிலையில் இல்லாமல் சொரூப நிலையில் விளங்கி அருள்புரியும் ஒருபரம்பொருளே;
ஆய் எனைக் காக்க - இவ்வாறு ஒரேபரம் பொருளாக விளங்கி என்னைக்
காத்தருள்க. (பீஜாட்சரங்கள் வரும் இத்திருப்பாடலை மிகவும் கவனத்துடன் பிழையின்றி ஓதுக)
பேணுதல் விழிச்சர வணபவப் பெருந்தகை
மாண்நுதல் நயன கம் கணபதி வளர்அனல்
காண்நுதல் அரன்உமை அருள்எனைக் காக்க (7)
சீமகள் நனிபுகழ் ஓம்நமச் சிவாய வை
பூமகள் புகழ்உமை பூம்புகழ்க் கவிஇறை
ஏம்அக கனஅருள் காத்தருள்க எனையே (8)
No comments:
Post a Comment